


நோக்கம் : சுற்றுலா மேம்பாடு மற்றும் உறுப்பினர் முன்னேற்றத்தை
உள்ளடக்கிய மாமதுரையின் வளர்ச்சி.
எது மாமதுரை ? மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம்.
இயற்கை மற்றும் தொழிலின் அடையாளமாக பச்சை மற்றும் நீல நிறங்களையும், பண்டைய பாண்டிய தேச அடையாளமாக மீன் சின்னமும், தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் அடையாளமாக காளையின் முகத்தையும் அடையாள குறியீடயங்களாக கொண்டுள்ளது மாமதுரையர்.
மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளில் வசிப்பவர்கள் அல்லது இவற்றை பூர்வீகமாக கொண்டவர்கள்.

18 வயதுக்கு மேற்பட்ட மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளை பூர்வீகமாக கொண்ட அல்லது வசிப்பவர்கள் உறுப்பினராக இணையலாம்.

மாமதுரைய ர் இயக்கம் – ஒரு அறிமுகம்
பொதுவாக மக்களிடேயே ஒற்றுமை என்பது நாடு சார்ந்து, மொழி சார்ந்து இனம் சார்ந்து ஏற்படும், அதே போல் ஊர் சார்ந்தும் ஏற்படும் அதிலும் நமது ஊர் சார்ந்த ஒற்றுமை என்பது “நாங்கல்லாம் மதுரை” என்று பெருமையுடன் இணைவதாக இருக்கும். எனவே ஊர் சார்ந்த ஒற்றுமையை அடிப்படையாக கொண்டு 2014 ஆம் ஆண்டு மே மாதம் திரு.ஜே.கே. முத்து அவர்களால் சமூகவலைத்தளம் மற்றும் வாட்சாப் குழுவாக நிறுவப்பட்ட அமைப்பு, 25 நவம்பர் 2023 இல் களப்பணி ஆற்றும் இயக்கமாக மாறியது, மாமதுரையர் அகிலஉலக தலைவராக முனைவர். க. திருமுருகன் நிறுவனரால் நியமிக்கப்பட்டார்.

நேற்று நிகழ்வு, இன்று நினைவு !
விழிப்புணர்வு விதைக்கும் நிகழ்வுகள்


தூயமதுரை
ஆற்றுப்படுகை நாகரிகத்தில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கிய நகரம் நம் மாமதுரை மாநகரம்.
பல்லாண்டுகளாய் சுறுசுறுப்பாக இயங்கி, தூங்கா நகரமென்று பெயரெடுத்த மாமதுரை... தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாகும்.
மாமதுரையால் தமிழுக்கு பெருமை... தமிழால் மாமதுரைக்கு பெருமை என்று மார்தட்டிச் சொல்லி பெருமிதம் கொள்ள வேண்டிய மாமதுரையர்களை வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.
ஆம்! பாரம்பரியமிக்க நம் மாமதுரையின் அத்தனை நற்செயல்களையும் தகர்த்தெறிந்து, பின்னுக்குத் தள்ளியிருக்கிறது, 2024-25 களில் ஸ்வட்ச் ஸ்வரக்ஷன் அறிக்கை.

மாமதுரையர் அமைப்பின் செயல் திட்டங்கள்

