
MEMBERSHIP
மாற்றத்தை உருவாக்க உங்கள் உறுப்பினர் ஆதரவு தேவை!
உறுப்பினர் பயன்கள் & சந்தா
உறுப்பினர் சந்தா:
வருடாந்திர உறுப்பினர் சந்தா - ரூ. 500/-
ரூ. 15,000/- க்கு மேல் வழங்கும் நன்கொடையாளர்களுக்கு ஆயுட்கால உறுப்பினர் இலவசம்.
உறுப்பினர் பயன்கள் :
-
மாமதுரையர் ஆண்டுவிழா, புத்தாண்டு, கிருஸ்துமஸ், பொங்கல், மகளிர் தினம், ரம்ஜான் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று சிறப்பு பரிசுகளை பெறலாம்.
-
கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்துகொள்ளலாம்.
-
அவ்வப்போது நடத்தப்படும் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம்.
-
சுய வேலைவாய்ப்பு, சிறு குறு வணிகம் மற்றும் சுய தொழில் ஊக்குவிப்பு திட்டமான "இல்லம்தோறும் தொழில்” திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
-
பல்வேறு “மகளிர் பாசறைகள்” மூலம் பெண் உறுப்பினர்கள் தற்சார்பு அதிகாரம் பெற வழிவகை செய்யப்படும்.
-
புதுமைத்தொழில் ஆர்வலர்கள் "வீட்டுக்கு ஒரு ஸ்டார்ட்அப்" திட்டம் மூலம் அரசு மற்றும் அமைப்புகளின் நிதி உள்ளிட்ட உதவிகளை பெறலாம்.
-
HELPLINE, EDUCATION, JOBS, BUSINESS, PROPERTIES, BLOOD DONORS உள்ளிட்ட பல்வேறு WHATSAPP குழுக்கள் அடங்கிய COMMUNITY யில் இணைந்து பயன்பெறலாம்.
-
உறுப்பினர்களில் அமைப்புக்கு மிகுந்த பங்களிப்பு வழங்கியவர்கள், சமூக சேவகர்கள் மற்றும் சாதனையாளர்களை கண்டறிந்து "மாமதுரையர் விருது" வழங்கி ஊக்குவிக்கப்படும்.


நிரந்தர உறுப்பினர்... நிலையான நன்மைகள்!

ஆயுட்கால உறுப்பினர் - சிறப்பு பயன்கள்
-
சிறப்பு அட்டை (PRIVILEGE CARD) மூலம் 5% முதல் 50% வரை தள்ளுபடியில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை மாமதுரை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பெறலாம்.
-
சட்டம், கல்வி, வேலைவாய்ப்பு, மனநலம் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட தேவைகளுக்கு வழிகாட்டுதல்களை பெறலாம்.
-
நிதியுதவி உள்ளிட்ட அரசு சலுகைகளை பெற வழிகாட்டப்படும்.
-
தொழிலை முறையாக துவக்க, சிறப்பாக நடத்த, பெரிதாக வளர்க்க தேவையான ஆலோசனைகள் பெறலாம்.
-
விவசாயக்குழுக்கள், மகளிர் குழுக்கள் உள்ளிட்ட உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை “TAMILSMART” மூலம் QUICK COMMERCE, D2C & ஏற்றுமதி முறைகளில் நேரடியாக வணிகம் செய்யலாம்.
-
தொழில், வணிகம், நிதி மற்றும் பங்குதாரர் சார்ந்த பிணக்குகளுக்கு சமரச மையம் மூலம் தீர்வு பெறலாம்.
-
தொழில் வணிக விபரங்கள் MAAMADURAIYAR.COM பிஸ்னஸ் டைரக்டரியில் இடம் பெற செய்யலாம்.
-
சிஸ்டர் சிட்டி மற்றும் கிளஸ்டர் திட்டங்களில் இணையலாம்.
-
ஆயுட்கால உறுப்பினர்கள் செயற்குழு மற்றும் நிர்வாக குழுவுக்கு விண்ணப்பிக்கலாம்.

வெளிப்படையான விளக்கக் குறிப்பு
பொறுப்பு துறப்பு
நமது மாமதுரையர் அமைப்பின் நோக்கத்திற்காக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன. எனினும் இதன் மூலம் அறிமுகமாகும் நபர்கள், உறுப்பினர்கள் மற்றும் சேவை புரிவோர் உள்ளிட்டவர்களுடன் தாங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் நட்பு, தொழில் உடன்பாடு மற்றும் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் கவனமாகவும் தங்கள் சொந்த பொறுப்பிலும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம், இதில் ஏற்படும் பிணக்குகளுக்கு மாமதுரையர் அமைப்பு எவ்விதத்திலும் பொறுப்பாகாது.