
ABOUT US
ஜாதி, மதம், அரசியல், கருத ்தியல் மற்றும் தனிப்பட்ட விறுப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டு . . .
5 ஆம் தமிழ்ச்சங்கம், வற்றாத வைகை & இல்லம் தோறும் தொழில்
பொதுவாக மக்களிடேயே ஒற்றுமை என்பது நாடு சார்ந்து, மொழி சார்ந்து இனம் சார்ந்து ஏற்படும், அதே போல் ஊர் சார்ந்தும் ஏற்படும் அதிலும் நமது ஊர் சார்ந்த ஒற்றுமை என்பது “நாங்கல்லாம் மதுரை” என்று பெருமையுடன் இணைவதாக இருக்கும். எனவே ஊர் சார்ந்த ஒற்றுமையை அடிப்படையாக கொண்டு 2014 ஆம் ஆண்டு மே மாதம் திரு.ஜே.கே. முத்து அவர்களால் சமூகவலைத்தளம் மற்றும் வாட்சாப் குழுவாக நிறுவப்பட்ட அமைப்பு, 25 நவம்பர் 2023 இல் களப்பணி ஆற்றும் இயக்கமாக மாறியது, மாமதுரையர் அகிலஉலக தலைவராக முனைவர். க. திருமுருகன் நிறுவனரால் நியமிக்கப்பட்டார்.
முனைவர். க. திருமுருகன் தலைமையில் மாமதுரையர் அமைப்பு, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் & ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளின் சுற்றுலா மேம்பாடு மற்றும் உறுப்பினர் முன்னேற்றத்தை உள்ளடக்கிய மாமதுரையின் வளர்ச்சியை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.


மாமதுரையர் மக்கள் தொகை என்பது தோராயமாக ஒரு கோடியே 38 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதில் வெளிநாடுகளில் மட்டும் 4.5 லட்சம், வெளிமாநிலங்களில் 7 லட்சம், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் 11 லட்சம் பேர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் 1 லட்சம், இங்கிலாந்தில் 1 லட்சம், மலேசியாவில் 60 ஆயிரம், ஆஸ்திரேலியாவில் 50 ஆயிரம், சிங்கப்பூரில் 40 ஆயிரம், கனடாவில் 30 ஆயிரம், பெங்களூரில் 2 லட்சம், கேரளாவில் 1.5 லட்சம், மஹாராஷ்டிராவில் 1.5 லட்சம், குஜராத்தில் 1 லட்சம், சென்னையில் 3 லட்சம் என மாமதுரையை பூர்வீகமாக கொண்டவர்கள் வசிக்கின்றனர்.
ஜாதி, மதம், அரசியல், கருத்தியல் மற்றும் தனிப்பட்ட விறுப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டு அரசு மற்றும் அதிகார மையங்களுடன் சுமூக போக்கை கடைபிடித்து செயல்படும் நமது அமைப்பு கொள்கைகள் மற்றும் நோக்கங்களில் உடன்பாடு உள்ளவர்களை இணைத்து செயல்படுகிறது. உணவு, மருத்துவம், கல்வி, ஆன்மிகம், விளையாட்டு, புராதனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்கள் ஊக்குவிக்கும் வகையிலும், போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும் செயலாற்றவும், தொழில்முனைவை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகைகளை உருவாக்கி வருகிறது. நமது மாமதுரை மண்டலத்தை கலை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, நவீன விவசாயம், ஏற்றுமதி உள்ளிட்ட மதிப்புகூட்டு மற்றும் அறிவுசார் பொருளாதார மண்டலமாக அடையாளப்படுத்த முயலும் நம் அமைப்பு, இல்லம் தோறும் தொழில், வீட்டுக்கு ஒரு ஸ்டார்ட்அப், வற்றாத வைகை, 5 ஆம் தமிழ்ச்சங்கம் போன்ற திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது, மேலும் நமது நீண்ட கால கோரிக்கையான தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகராக மதுரையை அறிவித்து செயல்படுத்த வலியுறுத்தி வருகிறது.


மாமதுரையர் அமைப்பில்
நிர்வாகம்
செயற்குழு உறுப்பினர்கள் ஆயுள் கால உறுப்பினராக இருத்தல் அவசியம்.

நிர்வாக குழு
Governing Board Members

ஆலோசனை குழு
Advisory Board Members

செயற்குழு
Executive Committee Members

பொதுக்குழு
Donors & Lifetime Members

அனைத்து உறுப்பினர்கள் குழு
All Members
கொள்கைகள் மற்றும் நோக்கங்கள்
முன்னேற்றத்தை நோக்கிய திட்டமிட்ட பயணம்
தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பு, ஜாதி, மதம், அரசியல் மற்றும் கருத்தியலுக்கு அப்பாற்பட்டு லாபநோக்கமின்றி செயல்படுதல்.
அரசு மற்றும் அதிகார மையங்களுடன் சுமூக போக்கை கடைபிடித ்தல். மதுரையை தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகராக அறிவித்து செயல்படுத்த வலியுறுத்துதல்.
நமது கொள்கைகள் மற்றும் நோக்கங்களில் உடன்பாடு உள்ளவர்களுடன் இணைந்து செயல்படுதல் மற்றும் ஆதரவளித்தல்.
அடிப்ப டை உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம் மற்றும் தகவல் வசதி அனைவருக்கும் கிடைக்க செய்தல்.
பொருளாதார வளர்ச்சியை ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்தி எல்லாமும் எல்லார்க்கும் கிடைக்க வழிவகை செய்தல்.
சுற்றுச்சூழல், இயற்கை வளம் மற்றும் ஜீவராசிகள் ஆகியவற்றை பாதிக்கும் அம்சங்களிலிருந்து காத்தல்.
தற்சார்பு மற்றும் அருகாமை பொருளாதாரத்தை ஊக்குவித்தல். இணையத்தில் தமிழை வளர்க்கவும், தமிழர்களிடத்தில் இணையத்தை வளர்க்கவும் வழிவகை செய்தல்.
தாய்மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பாதிக்கும் அம்சங்களிலிருந்து காத்தல்.
இளைஞர்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும் செயலாற்றவும் வழிநடத்துதல்.
சமூகத்தில் பண்பட்ட பழக்கவழக்கங்களை ஏற்படுத்தி ஊக்குவித்தல்.
தொழில்முனைவை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
பல்வேறு தொழில்துறை ஆராய்ச்சிகள் மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல்.
மாமதுரையர் செயல்பாடுகள்
சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னலமின்றி பணிபுரியும் பணி!
-
முக்கிய தலங்களின் அருமை பெருமைகளை வீடியோக்களாக, சேனல்கள் மூலம், உலகமுழுவதும் இலட்சக்கணக்கானோருக்கு கொண்டு சேர்க்க முயற்சிக்கப்படும்.
-
உணவு, மருத்துவம், கல்வி, விளையாட்டு, புராதனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்கள் ஊக்குவிக்கப்படும்.
-
போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தி தூய்மையாக ஜொலிக்க வைக்க முயற்சிக்கப்படும்.
-
பல்வேறு பகுதிகளில் பாரம்பரியம், பெருமை மற்றும் வரலாற்றை பறைசாற்றும் சிலைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற முயற்சிக்கப்படும்.
-
மாமதுரையை சுற்றுலா, கலை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, நவீன விவசாயம், ஏற்றுமதி உள்ளிட்ட மதிப்புகூட்டு மற்றும் அறிவுசார் பொருளாதார மண்டலமாக அடையாளப்படுத்த முயற்சிக்கப்படும்.
-
தொழில் வணிகம் மற்றும் சேவை தொழில் செய்பவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை உயர்ந்த தரத்தில் வழங்குவது ஊக்குவிக்கப்படும்.
-
முடங்கும் நிலையில் உள்ள பாரம்பரிய தொழில் வணிகங்களை புனரமைக்க அரசு மற்றும் தனியார் நிதி உதவியுடன் மீட்டெடுக்க முயற்சிக்கப்படும்.
-
தொழில் வளர்ச்சிக்கு துறைவாரியாக பல்வேறு கிளஸ்டர்கள் உருவாக்க முயற்சிக்கப்படும்.
-
UNLEARN SCHOOL திட்டம் மூலம்
-
பல்வேறு நாட்டு நகரங்களுடன் சகோதரி நகராக (SISTER CITY) இணைக்க முயற்சிக்கப்படும்.
-
தமிழ் காக்க, தமிழ் வளர்க்க "5 ஆம் தமிழ்ச்சங்கம்" செயல்படுத்தப்படும்.
-
தன்னார்வ உறுப்பினர்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் உருவாக்கி செயல்படுத்தப்படும்.
-
“வற்றாத வைகை” திட்டம் மூலம் நீர்நிலைகள் மேம்படுத்தப்படும்.