top of page
bg_edited.jpg

தூயமதுரை

மாமதுரையர்  அமைப்பின்

 "தூயமதுரை" திட்டம்

ஆற்றுப்படுகை நாகரிகத்தில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கிய நகரம் நம் மாமதுரை மாநகரம்.

 

பல்லாண்டுகளாய் சுறுசுறுப்பாக இயங்கி, தூங்கா நகரமென்று பெயரெடுத்த மாமதுரை... தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாகும்.

 

மாமதுரையால் தமிழுக்கு பெருமை... தமிழால் மாமதுரைக்கு பெருமை என்று மார்தட்டிச் சொல்லி பெருமிதம் கொள்ள வேண்டிய மாமதுரையர்களை வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.

 

ஆம்! பாரம்பரியமிக்க நம் மாமதுரையின் அத்தனை நற்செயல்களையும் தகர்த்தெறிந்து, பின்னுக்குத் தள்ளியிருக்கிறது,  2024-25 களில் ஸ்வட்ச் ஸ்வரக்‌ஷன் அறிக்கை.

 

அரசியலில் தொடங்கி சினிமா வெற்றி வரை எல்லாவற்றிலும் முதலிடம் பிடிக்கும் மாமதுரை, உலக அளவில் சுத்தமான நகரங்களின் வரிசையில் மட்டும் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது உண்மையிலேயே வேதனைக்குரியதாகும்.

 

அசுத்தத்தில் முதலிடம் என்று சமூக தளங்களில் தூங்கா நகரை கலாய்த்துத் தள்ளும் மீம்ஸ்கள் இன்னமும் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது.

 

அரசு இயந்திரம் ஒரு புறம்...  தன்னார்வலர்கள் ஒருபுறம் என பல முன்னெடுப்புகளை எடுத்தாலும் இன்னமும் மதுரை குப்பை நகரமாகத்தான் இருக்கிறது என்பதே நிதர்சனம்.

 

இப்படிப்பட்ட சூழலில்தான் தூங்கா நகரை சுத்தத்தில் முதலிடத்திற்குக் கொண்டு வர நம் "மாமதுரையர் அமைப்பு" ஒரு பெருமுயற்சியை முன்னெடுத்துள்ளது.

 

"என் மதுரை என் கடமை"

"என் சுத்தம் என் உரிமை" 

 

-என்ற அரைகூவலுடன் 

 

"மாமதுரை... இனி தூய மதுரை" என்று சொல்லும் நாள் வெகுதூரமில்லை. அதற்கு ஆரம்பப் புள்ளியை இன்று வைத்துள்ளோம்.

 

சிறப்பான திட்டமிடல்...

ஒழுக்கமான‌ செயல்பாட்டுடன், களமாடப் போகிறார்கள் மாமதுரையர்கள்.

 

தூங்கா நகரோடு, தூய நகர் என்ற பெயரையும் மாமதுரைக்குப் பெற்றுத் தருவதே மாமதுரையில் சுவாசிக்கும் ஒவ்வொருவரின் குறிக்கோளாக மாற்றுவோம்!

 

நம் மண்ணிற்கான களங்கம் களைய...

 

ஒருமனதாக ஒண்றினைந்து உறுதி‌மொழியுடன்... 

 

நம் மாமதுரை மண்ணின் தூய்மைப் பயணம்

 

இதோ இங்கே இப்போதில் இருந்து தொடங்குகிறது !

*மாமதுரையர்  அமைப்பின் "தூயமதுரை" க்கான உறுதிமொழி.*

about2

மாமதுரையராகிய நான்,

"தூயமதுரை" யை உருவாக்குவது என் கடமை என உணர்கிறேன்.

 

தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு . . .

ஜாதி, மதம், அரசியல் ...

போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு . . .

மாமதுரையராக ஒன்றுபடுவேன்.

 

நானும், என் குடும்பத்தினரும் . . .

எங்கள் சுற்றமும் . . .

அசுத்தப்படுத்தவோ ..

அசுத்தத்தை அனுமதிக்கவோ மாட்டோம்.

 

அரசு அதிகாரிகள், ஊழியர்களுடன் இணைந்து  . . .

நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டு . . .

என் வீடு, என் வீதி, என் பகுதி ...

என்ற அடிப்படையில் . ..

“என் மதுரை – என் கடமை ” என்ற உணர்வுடன்

"தூயமதுரை" யை உருவாக்க உறுதியளிக்கிறேன்.

மாமதுரையர் அமைப்பு

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளின் பொருளாதார மேம்பாடு, சுற்றுலா வளர்ச்சி மற்றும் உறுப்பினர் முன்னேற்றம் போன்றவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டு செயல்படுகிறது.

  • Facebook
  • Instagram
  • LinkedIn
  • Threads
  • Telegram
  • Youtube

GET IN TOUCH

#500, 10th East Cross Street, Anna Nagar, Madurai - 625020, Tamil Nadu, India.

Helpline No :

EVENT GALLERY

bottom of page