top of page
bg_edited.jpg

SELFV CONTEST

உங்கள் மொபைலிலேயே ஒரு நிமிட வீடியோ எடுத்து பரிசுகளை வெல்லுங்கள் !

உணர்வுகள் பேசட்டும் ! மாமதுரையின் பெருமைகள் உங்கள் மூலம் பரவட்டும் 

இந்த போட்டியின் நோக்கம் :

மாமதுரையான மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளின் சுற்றுலா வளர்ச்சியை அடிப்படையாக வைத்து அது சார்ந்த இடங்கள் மற்றும் சிறப்புக்களை விடியோக்கள் மூலம் உலகெங்கும் கொண்டு சேர்த்தல் மற்றும் திறமையானவர்களை அங்கீகரித்தல்.

competition
selection basics

சிறப்பு அம்சங்கள் :

  • மாமதுரையின் பெருமைகள், வரலாறு, சிறப்பு இடங்கள், பண்பாடு, கலாசாரம், பாரம்பரியம், மரபுகள், உணவு என எந்தவொரு அம்சத்தையும் ஒரு நிமிட வீடியோவாக தயாரிக்கலாம்.

  • அனைவருக்கும் திறந்த வாய்ப்பு – யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் 

  • மிகவும் தெரிந்த மற்றும் நன்கு அறியப்பட்ட இடங்கள் தாண்டி அதிகம் தெரியாத, மறக்கப்பட்ட இடங்களை, சிறப்புக்களை தாங்கள் தேர்ந்தெடுத்தல் நன்று.

  • அதிகமான உணர்வோட்டம், உரைத்திறன், சுய பாணி பிரதிபலிக்கலாம்.

  • ஒருவர் 1-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அனுப்பலாம்

  • பரிசுகள் மட்டுமல்ல, உங்கள் வீடியோ இலட்சக் கணக்கானோரை சென்றடையும் மாமதுரையின் பெருமையோடு உங்கள் புகழும் பரவும் !

பங்கேற்பு விதிமுறைகள் :

1. வீடியோவில் ஜாதி, மதம், அரசியல், தொழில் வணிக பரப்புரைகள் சார்ந்த கருத்துகள் இருக்கக்கூடாது.
2. மற்றவர் வீடியோ மற்றும் COPYRIGHTED கன்டென்ட்கள் உள்ளீடாமல் முழுக்க உங்கள் படைப்பாக இருக்க வேண்டும்.
3. ஒரு நிமிடதிற்கு மிகாமல் வீடியோ HD தரத்தில் அனுப்ப வேண்டும்.
4. மைனர் வயதுடையோர் தயாரித்தாலும் அதை அனுப்புவது அவர்களின் பெற்றோர் அல்லது கார்டியன் என எடுத்துக்கொள்ளப்படும்.
5. அனுப்புவதன் மூலம் அனைத்து வீடியோக்களும் மாமதுரையர் அமைப்பினால் அனுசரணையாளர் லோகோ உள்ளிட்ட கன்டென்ட் உள்ளீடு செய்து அதன் INSTAGRAM உள்ளிட்ட அனைத்து சேனல்களில் பதிவேற்றவும், முழு டிஜிட்டல் உரிமையும் உள்ளது என ஒப்புக்கொள்கிறீர்கள்.
6. முதல் கட்டமாக 100 வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு MAAMADURAIYAR INSTAGRAM சேனலில் வெளியிடப்படும்.
7. பதிவேற்றப்பட்டதிலிருந்து 5 நாட்களில் அதிக VIEWS & LIKES பெற்ற வீடியோக்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும்.
8. தரமான உள்ளடக்கம், காட்சியமைப்பு, உரைநடை உள்ளிட்டவை கணக்கில் எடுக்கப்படும், நடுவர் தீர்ப்பே இறுதியானது.
9. விருது விழாவில் 1st, 2nd & 3rd பரிசுகள், விருதுகள் & சான்றிதழ்கள், மற்றும் 7 சிறப்பு பரிசுகள் பிரபலங்களால் வழங்கப்படும்.

participation

தங்கள் வீடியோவை பதிவேற்றம் செய்ய :


உங்கள் பெயர்,  பாலினம் , வயது, இருப்பிடம் மற்றும் வாட்சப் எண் குறிப்பிட்டு +91 82204 49911 எண்ணுக்கு அனுப்பவும்.

மேலும் விவரங்களுக்கு: https://www.maamaduraiyar.com/contest

மாமதுரையர் அமைப்பு

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளின் பொருளாதார மேம்பாடு, சுற்றுலா வளர்ச்சி மற்றும் உறுப்பினர் முன்னேற்றம் போன்றவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டு செயல்படுகிறது.

  • Facebook
  • Instagram
  • LinkedIn
  • Threads
  • Telegram
  • Youtube

GET IN TOUCH

#500, 10th East Cross Street, Anna Nagar, Madurai - 625020, Tamil Nadu, India.

|

EVENT GALLERY

bottom of page