

மாநகரத்தின் மரபும், வீரமிகு வரலாறும்!
மாமதுரையர் இயக்கம் – ஒரு அறிமுகம ்
மாமதுரை – தமிழரின் பெருமையும் பாரம்பரியமும் சுமக்கும் புனித நிலம். தமிழரின் நாகரிகத்தின் மையமாகவும், சங்க காலத்தின் செல்வாக்கு நகரமாகவும், பல்வேறு சமயங்களின் பசுமை மண்ணாகவும் திகழ்ந்தது. அந்த பெருமையை மீண்டும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் பணியில் மாமதுரையர் இயக்கம் தன்னை அர்ப்பணித்துள்ளது.
மாமதுரையர் இயக்கம் என்பது, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் மற்றும் உலகம் முழுவதும் பூர்வீகமாக இங்கு சேர்ந்தோர் இணைந்து உருவாக்கிய, இலாப நோக்கமற்ற சமூக, பண்பாட்டு மற்றும் பொருளாதார மேம்பாட்டு இயக்கமாகும்.
நாம் ஒன்றிணைந்தால், மாமதுரை நகரை இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக உயர்த்தும் கனவும் நிஜமாகும்.
நீங்களும் ஒரு மாமதுரையர். இப்போது இணைக!
மாமதுரையர் அமைப்பின்
நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள்
-
தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பு, ஜாதி, மதம், அரசியல் மற்றும் கருத்தியலுக்கு அப்பாற்பட்டு லாபநோக்கமின்றி மாமதுரையர் அமைப்பு செயல்படும்.
-
உறுப்பினர் மற்றும் அவர்தம் குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்படும்.
-
"வீட்டுக்கு ஒரு ஸ்டார்ட்அப்" மற்றும் "இல்லம்தோறும் தொழில்” திட்டங்கள் மூலம் சுய வேலைவாய்ப்பு, சிறு குறு வணிகம், மற்றும் சுய தொழில்களை ஊக்குவித்து ஒவ்வொரு வீட்டிலும் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கபடும்.
-
மாமதுரையை சுற்றுலா, கலை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, நவீன விவசாயம், ஏற்றுமதி உள்ளிட்ட மதிப்புகூட்டு மற்றும் அறிவுசார் பொருளாதார மண்டலமாக அடையாளப்படுத்த முயற்சிக்கப்படும்.
-
உணவு, மருத்துவம், கல்வி, விளையாட்டு, புராதனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்கள் ஊக்குவிக்கப்படும்.
-
போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தி தூய்மையாக ஜொலிக்க வைக்க முயற்சிக்கப்படும்.
-
பல்வேறு பகுதிகளில் பாரம்பரியம், பெருமை மற்றும் வரலாற்றை பறைசாற்றும் சிலைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற முயற்சிக்கப்படும்.
-
தொழில் வணிகம் மற்றும் சேவை தொழில் செய்பவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை உயர்ந்த தரத்தில் வழங்குவது ஊக்குவிக்கப்படும்.
-
முக்கிய தலங்களின் அருமை பெருமைகளை வீடியோக்களாக, சேனல்கள் மூலம், உலகமுழுவதும் இலட்சக்கணக்கானோருக்கு கொண்டு சேர்க்க முயற்சிக்கப்படும்.
-
பல்வேறு நாட்டு நகரங்களுடன் சகோதரி நகராக (SISTER CITY) இணைக்க முயற்சிக்கப்படும்.
-
முடங்கும் நிலையில் உள்ள பாரம்பரிய தொழில் வணிகங்களை புனரமைக்க அரசு மற்றும் தனியார் நிதி உதவியுடன் மீட்டெடுக்க முயற்சிக்கப்படும்.
-
தமிழ் காக்க, தமிழ் வளர்க்க "5 ஆம் தமிழ்ச்சங்கம்" செயல்படுத்தப்படும்.
-
தொழில் வளர்ச்சிக்கு துறைவாரியாக பல்வேறு கிளஸ்டர்கள் உருவாக்க முயற்சிக்கப்படும்.
-
சமூக சேவகர்கள் மற்றும் சாதனையாளர்களை கண்டறிந்து "மாமதுரையர் விருது" வழங்கி ஊக்குவிக்கப்படும்.

மாற்றத்தை உருவாக்க உங்கள் உறுப்பினர் ஆதரவு தேவை!
உறுப்பினர் பயன்கள் & சந்தா
*உறுப்பினர் சந்தா:*
வருடாந்திர உறுப்பினர் சந்தா - ரூ. 500/-
ரூ. 10,000/- க்கு மேல் வழங்கும் நன்கொடையாளர்களுக்கு ஆயுட்கால உறுப்பினர் இலவசம்.
-----
*உறுப்பினர் பயன்கள்:*
1) புத்தாண்டு & கிருஸ்துமஸ், பொங்கல் விழா, மகளிர் தினம், ரம்ஜான் கொண்டாட்டங்கள், தொழில், வணிகம், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்துகொள்ளலாம்.
2) "வீட்டுக்கு ஒரு ஸ்டார்ட்அப்" மற்றும் "இல்லம் தோறும் தொழில்" திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
3) மாமதுரையர் ஆண்டுவிழாவில் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று சிறப்பு பரிசுகளை பெறலாம்.
4) JOBS, BUSINESS, PROPERTIES, EDUCATION, BLOOD DONORS, HELPLINE உள்ளிட்ட பல்வேறு WHATSAPP குழுக்கள் அடங்கிய COMMUNITY யில் இணைந்து பயன்பெறலாம்.
5) அவ்வப்போது நடத்தப்படும் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம்.
6) உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
*ஆயுட்கால உறுப்பினர் - சிறப்பு பயன்கள்:*
1) சிறப்பு அட்டை (PRIVILEGE CARD) மூலம் 5% முதல் 50% வரை தள்ளுபடியில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை மாமதுரை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பெறலாம்.
2) ஆயுட்கால உறுப்பினர் தொழில் வணிக விபரங்கள் MAAMADURAIYAR.COM பிஸ்னஸ் டைரக்டரியில் இடம் பெறும்.
3) சிஸ்டர் சிட்டி மற்றும் கிளஸ்டர் திட்டங்களில் இணையலாம்.
4) தொழிலை முறையாக துவக்க, சிறப்பாக நடத்த, பெரிதாக வளர்க்க தேவையான ஆலோசனைகள் பெறலாம்.
5) ஆயுட்கால உறுப்பினர்கள் மட்டுமே செயற்குழு மற்றும் நிர்வாக குழுவில் இடம் பெற முடியும்.